Thamizh Poem by Arasu Balraj
An impressive poem in Thamizh
நாலாவது தூண்
தினத் தந்தி தலைப்புச் செய்தி:
பிறந்தார் பேரன்;
தாத்தா ஆனார் ரஜினிகாந்த்!
தலைப்புச் செய்தியே இப்படி என்றால்,
உள்ளே என்ன இருக்கும்?
சிறப்புச் செய்தி:
அதிசயம்,
ஆனால் உண்மை!
பிறந்தார் பேரன்;
தாத்தா ஆனார் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
லதா ரஜினிகாந்த் பாட்டி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
தனுஷ் அப்பா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
ஐஸ்வர்யா தனுஷ் அம்மா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
ஐஸ்வர்யாவின் தங்கை சித்தி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
தனுஷின் அண்ணன் பெரியப்பா ஆனார்!
உங்களால் நம்ப முடிகிறதா,
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜா கூட தாத்தா ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜா பொண்டாட்டி கூட பாட்டி ஆனார்!
ரஜினிகாந்த் தாத்தா ஆனதால்,
கஸ்தூரி ராஜாவின் ஒன்று விட்ட சித்தப்பா….
பிற முக்கியமில்லாத செய்திகள்:
டெங்கு காய்ச்சல் பரவுகிறது! அரசு மெத்தனம்!
கடன் தொல்லையால் விஷம் குடித்த விவசாயி சாவு!
–இன்னும் சில இது போன்ற சில வழக்கமான,
ஆச்சரியப்பட வேண்டாத செய்திகள்——–
வாங்கிப் படியுங்கள் தினத் தந்தி!
வாழ்க இந்தியா!
வளர்க நாலாவது தூண்!
No comments yet
Leave a reply
